நினைவுகளின் எடை
View Original ↗புத்தகப் பையில் வைக்கும் போதும் தெரியவில்லை.
ஒவ்வொரு முறை வீடுகள் மாற்றும் போதும் தெரியவில்லை.
வருடம் செல்ல செல்ல தூக்கிசெல்ல பாரமாய் இருந்ததால் என்னவொ
உடனிருப்பவர்களுக்கும் என் உணர்வுகள் புரியவில்லை.
படித்துக் களிக்கும் போதும் பாரமாய் இருந்தில்லை. பார்க்கும்போதெல்லாம் பள்ளி வகுப்பறைக்கே அழைத்து சென்றது ரெக்கார்டு நோட்டுகளும் அப்சர்வேசன் நோட்டுகளும்
கட்டுரை நோட்டுகள் கையெழுத்தை அழகாக காட்டியது ரப் நோட்டுகளோ கணப்பொழுதில் இம்போசின்களையே நினைவூட்டியது.
ஒரேமுறையாக இழுத்துச் செல்லத் வண்டியும் திறனறியது. இரண்டு முறையாக எடுத்து செல்ல முயற்சிக்கவில்லை மூட்டை கட்டி விற்று விட்டேன்.
47.350 கிராம் தான்….
என் 21 வருட நினைவுகளின் எடை.
எழுத்து : ஹரிஹரன் உமாபதி
வரைகலை: செய்யறிவு
Hariharan Umapathi