
வேண்டும் வேண்டும் என வேண்டும்வெற்றிகள்
என்னிடம் போதும் போதும் என கூறும் தோல்விகள்
சிறுசிறு வெற்றிக்கும் மகிழ்ச்சி அடைந்தேன் அன்று
தினமும் மூன்று...கிடைக்குமா? சற்று பார்ப்போம் முயன்று
தீராக் காதல் அதீத அன்பினால் தினமும் மோதல்
போதும் எல்லாம் என்று முடிக்கையில் மீண்டும் பூக்கும் சிறு காதல்
ஊடலும் முடியவில்லை கோபமும் குறையவில்லை
முயற்சி செய்கிறேன் அமைதியாக! சந்தேகங்கள் எழாமலில்லை
மதிமுகம் காணவந்தவன் நிம்மதி தேடியே அலைகிறேன்
விதை விதைக்கையில் மரம் தழைக்குமா யோசிக்கிறேன்
பிடித்ததை செய்கையில் பித்துப் பிடித்து போகிறது
கதையை முடிக்க செல்கையில் கவிதையோ தொடங்குகிறது
-- --
எழுத்து : ஹரிஹரன் உமாபதி
வரைகலை: செய்யறிவு மற்றும் கிம்ப்(Gimp)
வெற்றிகள்