CurlFtpFS – A FTP filesystem based on cURL and FUSE
ஆக என்ன பயன்?
ஒரு ftp தளத்திலிருந்து கோப்பு மேலாளர்(nautilus,nemo…etc) மூலமாகவே ஒரு தளத்தினை வன்வட்டில் உள்ளது போலவே அணுக இயலும்.
எவ்வாறு நிறுவுவது?
sudo apt install curlftpfs
எனும் கட்டளையை இயக்கி நிறுவலாம்.
எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில் நமது கோப்பு அமைப்பில் நாம் பயன்படுத்தபோகிற ftp தளத்திற்கு ஒரு கோப்புறை உருவாக்குக (கோப்புறைக்கு 777 அனுமதி வழங்கு).
mkdir my-ftp
chmod 700 my-ftp
பின்னர் பின்வரும் கட்டளைகளில் எதாவது ஒன்றை இயக்கி நாம் ftp தளத்தினை இணைக்கலாம்.
curlftpfs ftp://username:password:ftpsite.com ~/my-ftp
(அ)
curlftpts ftpsite.com -o user="username:password" ~/my-ftp
(அ)
curlftpfs ftpsite.com
எந்த அளவு பாதுகாப்பானது ?
உங்களுக்கு உங்களுடைய ftp வழங்கியின் கடவுச்சொல் செயல்பாடு அளவில் (process level) பிற பயனர்களுக்கு தெரியாமல் இருக்க .netrc கோப்பில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை காட்டாமல் பயன்படுத்தலாம்.
~/.netrc எனும் கோப்பினை உங்களது விருப்ப உரைதொகுப்பியில் திறக்கவும். கோப்பு இல்லையேல் புதியதொன்றை உருவாக்கிகொள்ளவும்.
machine ftpsite.com username yourfancyusername password yourhardpassword
கோப்பினில் மேற்கண்டவாறு ftp தளத்தின் பெயர் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை சேமித்துக்கொள்ளவும்.
கோப்பு ஆனது 600 அனுமதி கொண்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். உங்களது கடவுச்சொல் வெறும் உரையாக சேமிக்கப்பட்டிருக்கிறது. பிற பயனர்களின் தேவையற்ற அனுகலை இது தடுக்கிறது.
FTP : கோப்பு அனுப்பும் நெறிமுறை plain text ஆக இருப்பதால் அதில் நீங்கள் பெரிய பாதுகாப்பை எதிர்ப்பார்க்க முடியாது உங்களுடைய திறன்பேசியின் hotspot , வீட்டில் இருக்கும் wifi மூலமாக மட்டுமே அணுகுவீர்கள் எனில் நல்லது.
FTPS : கோப்பு அனுப்பும் நெறிமுறை பாதுகாக்கப்பட்டது இதில் மறைப்பாக்கம் (encryption) மூலம் பாதுகாக்கப்படுவதால் ftp யை விட சற்று பாதுகாப்பானது
SFTP : பாதுகாப்பான கோப்பு பரிமாற்ற நெறிமுறை ஆனது sshன் மறைப்பக்க யுக்திகளை பின்பற்றுவதால் மேற்சொன்ன மூன்றில் இது அதிக பாதுகாப்பினை வழங்குகிறது.
மேலும் அறிய
https://curlftpfs.sourceforge.net/
https://techworldkb.wordpress.com/2014/07/02/how-to-set-ftp-autologin-with-netrc-file-in-linux/
FUSE- https://medium.com/@goamaral/fuse-filesystem-b44768f27aa2
வினாக்கள் இருப்பின் கமண்ட்ஸ் பகுதியில் கேட்கவும்.